அ.தி.மு.க-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம்


அ.தி.மு.க-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 26 March 2019 11:31 PM GMT (Updated: 26 March 2019 11:31 PM GMT)

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஆரணி தொகுதியில் இன்று (புதன்கிழமை) தனது பிரசாரத்தை அவர் தொடங்குகிறார்.

சென்னை,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (புதன்கிழமை) முதல் 19 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரசாரம் மேற்கொள்ளும் நாட்கள் மற்றும் இடங்கள் விவரம் வருமாறு:-
27-ந் தேதி (இன்று) - ஆரணி, திருவண்ணாமலை தொகுதிகள். 28-ந் தேதி - பெரம்பலூர், திருச்சி, கரூர் தொகுதிகள். இரவு திண்டுக்கலில் பொதுக்கூட்டம். 29-ந் தேதி - திண்டுக்கல் தொகுதி. 30-ந் தேதி - கடலூர் தொகுதி. 31-ந் தேதி - கடலூர் தொகுதி. ஏப்ரல் 1-ந் தேதி - விழுப்புரம் தொகுதி. 2-ந் தேதி - கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகள். 3-ந் தேதி - காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள். திருப்போரூர் சட்டமன்ற தொகுதி.

4-ந் தேதி - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. 5-ந் தேதி - ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. 6-ந் தேதி - மத்திய சென்னை, வடசென்னை தொகுதிகள். 7-ந் தேதி - மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகள். 8-ந் தேதி - அரக்கோணம் தொகுதி. 9-ந் தேதி - வேலூர் தொகுதி மற்றும் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள்.

10-ந் தேதி - கிருஷ்ணகிரி தொகுதி. 11-ந் தேதி தர்மபுரி தொகுதி. 12-ந் தேதி - தர்மபுரி தொகுதி. 13-ந் தேதி - தர்மபுரி தொகுதி. 14-ந் தேதி - சேலம் தொகுதி.

மேற்கண்ட தகவலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

Next Story