அரியானாவில் அதிர்ச்சி; சூட்கேசில் கை, கால்களை கட்டி, சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு
அரியானாவில் தேசிய நெடுஞ்சாலையில் சூட்கேஸ் ஒன்றில் கை, கால்களை கட்டி, சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் மீட்டு உள்ளனர்.
பானிபட்,
அரியானாவின் பானிபட் நகரில் சிவா கிராமம் அருகே அமைந்த ரோத்தக் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான சூட்கேஸ் ஒன்று பல மணிநேரம் தனியாக கிடந்து உள்ளது.
இதனால், சந்தேகம் அடைந்த அந்த பகுதியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்ததில் அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயில் டேப் வைத்து ஒட்டியபடி, 50 வயதுடைய பெண் ஒருவரது உடல் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, அந்த பகுதியை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். படுகொலை என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story