மத்திய பிரதேசம்: கோவில் படிக்கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விபத்து - 25-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக தகவல்


மத்திய பிரதேசம்: கோவில் படிக்கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விபத்து - 25-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக தகவல்
x
தினத்தந்தி 30 March 2023 3:14 PM IST (Updated: 30 March 2023 5:44 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் படேல் நகரில் உள்ள கோவில் பழமையான படிக்கிணறு உள்ளது. இங்கு இன்றைய தினம் அதிக அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்துள்ளனர். அப்போது பாரம் தாங்காமல் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் 25-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story