ஆந்திரா: சட்டவிரோதமாக இயங்கிவந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்


ஆந்திரா: சட்டவிரோதமாக இயங்கிவந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 7 Sept 2022 12:29 AM IST (Updated: 7 Sept 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோத முறையில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விசாகப்பட்டினம்,

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள சீனாயடபாலம் புறநகரில் சட்டவிரோத முறையில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம மக்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்ப இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வெடிப்பதற்கான சரியான காரணத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை என்று கூறிய போலீசார், இது பட்டாசு தயாரிக்கும் போது தேவையற்ற முறையில் ரசாயனங்கள் கலந்ததன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் வெடி விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story