'காந்தி' படம் பார்க்க சென்ற போது எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்த குழந்தைகள் காயம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 'காந்தி' படம் பார்க்க சென்றபோது நகரும் எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 'காந்தி' படம் பார்க்க சென்றபோது நகரும் எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து இரண்டு குழந்தைகள் காயமடைந்ததாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசபக்தி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் தெலங்கானா அரசு, 1982 ஆம் ஆண்டு வெளியான 'காந்தி' படத்தை குழந்தைகளுக்கு திரையிட்டது. 552 திரையரங்குகளில் சுமார் 22 லட்சம் குழந்தைகளுக்கு இந்த படம் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் ஐதராபாத் நகரின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பிவிஆர் சினிப்ளெக்ஸில் இலவச திரையிடலில் பங்கேற்க குழந்தைகள் வந்திருந்தபோது நகரும் எஸ்கலேட்டரில் இருந்து தவறி விழுந்து இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.