குஜராத் சட்டசபையில் அமளி: மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்


குஜராத் சட்டசபையில் அமளி: மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
x

குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட ஜிக்னேஷ் மேவானி மற்றும் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் நாள் முழுவதும் இடைநீக்கம் செய்தார்.

காந்திநகர்,

குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதற்காக நேற்று முன்தினம் சுயேச்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மற்றும் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பால்தேவ்ஜி தாகோர், பஞ்சாயத்து அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா அனுமதி அளிக்கவில்லை.

அதையடுத்து, ஜிக்னேஷ் மேவானி மற்றும் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையின் மையப்பகுதிக்கு ஓடினர். இடஒதுக்கீடு கோரி கோஷமிட்டு தரையில் அமர்ந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டசபை விவகார மந்திரி ராஜேந்திர திரிவேதி கேட்டுக்கொண்டார்.

அதை ஏற்று, ஜிக்னேஷ் மேவானி மற்றும் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் நாள் முழுவதும் இடைநீக்கம் செய்தார். வெளியேற மறுத்த சில எம்.எல்.ஏ.க்களை சபை காவலர்கள் வெளியேற்றினர்.


Next Story