பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கலாசிபாளையா ஜலகண்டேஸ்வர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக சுற்றிய ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த முகமது மசூது என்பதும், அவர் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.
இதனால் அவரை கைது செய்த போலீசார் 22 கிலோ 810 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். கைதான முகமது மசூது மீது கலாசிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story