புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்


புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல்
x

புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி,

தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, புதுச்சேரி அமைச்சரவையை கூட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு துணைநிலை ஆளுநரின் பரிந்துரையோடு கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டு முதல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


Next Story