இந்தியாவின் உயரமான கிறிஸ்துமஸ் மரம்... 100 அடி உயரத்தில் காண்போரை கவர்ந்திழுக்கும் அதிசயம்..!
பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் காண்போரை கவர்ந்திழுத்து வருகிறது.
பெங்களூரு,
உலகம் முழுவதும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலயங்கள், வீடுகள் என பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பது வழக்கம்.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல மால் ஒன்றில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் காண்போரை கவர்ந்திழுத்து வருகிறது. செயற்கை நீரூற்றுக்கு மத்தியில் 100 அடி உயரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வந்து பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story