ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் - அசோக் கெலாட் அறிவிப்பு


ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் -  அசோக் கெலாட் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 3:43 PM IST (Updated: 1 Jun 2023 4:17 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று மாநில முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

விரைவில் சட்டசபை தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், முதல்-மந்திரி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இதற்கு மேலும் ஒரு காரணமாக இருப்பது பிரதமர் மோடியின் பேரணி. ராஜஸ்தான் மாநிலத்தில் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஜ்மீர் மாவட்டத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நிலையில், ராஜஸ்தான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இலவச மின்சாரம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், இதன் மூலம், 100 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் குடும்பத்தினர், முதல் 100 யூனிட் மின்சாரம் முற்றிலும் இலவசம், 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு யூனிட் பயன்படுத்துகிறார்களோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால்போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story