கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக மளமளவென சரிவு


கொரோனா பாதிப்பு 7 ஆயிரமாக மளமளவென சரிவு
x
தினத்தந்தி 24 April 2023 10:13 AM IST (Updated: 25 April 2023 6:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 7 ஆயிரத்து 178 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்தது. தொற்றில் இருந்து 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 11 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 43 லட்சத்துக்கு மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

சமீபகாலமாக அதிகரித்து வந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 69 நாட்களுக்கு பிறகு குறைந்தது. 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 123 குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி, 65 ஆயிரத்து 683 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று முன்தினம் 29 பேர் பலியானார்கள். நேற்றைய பலி எண்ணிக்கை 16 ஆக குறைந்தது. அதில், கேரளாவில் விடுபட்ட 8 மரணங்களும் அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 345 ஆக உயர்ந்தது.

1 More update

Next Story