பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி 108 'நம்ம கிளினிக்' செயல்பட தொடக்கம்; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி


பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி 108 நம்ம கிளினிக் செயல்பட தொடக்கம்; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வருகிற 15-ந் தேதி 108 ‘நம்ம கிளினிக்’ செயல்பட தொடங்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 108 நம்ம கிளினிக்குகளை தொடங்குவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வருகிகற 15-ந் தேதி பெங்களூருவில் 108 நம்ம கிளினிக்குகள் செயல்பட தொடங்கும். வருகிற 15-ந் தேதி முதற்கட்டமாக பெங்களூருவில் 108 நம்ம கிளினிக்குகளுக்கு திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மல்லேசுவரம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பார்வையிட்டார். அப்போது சில சாலைகள் பெயர்ந்து இருந்ததை அவர் பார்வையிட்டார். அந்த சாலைகளை உடனடியாக போட நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.


Next Story