வரன்தேடி குவிந்த 11 ஆயிரம் வாலிபர்கள்- 250 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்ததால் பரபரப்பு


வரன்தேடி குவிந்த 11 ஆயிரம் வாலிபர்கள்-  250 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்ததால் பரபரப்பு
x

வரன்தேடி குவிந்த 11 ஆயிரம் வாலிபர்களுக்கு 250 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டியா: மண்டியா மாவட்டம் ஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஒக்கலிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடந்தது. இதில் அந்த சமுதாய ஆண்-பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடந்தது. ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நடந்த ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் முன்வந்தனர். இதில் ஏராளமானோர் விவசாயம் செய்யும் இளைஞர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மொத்தம் 12 ஆயிரம் பேர் தங்கள் பெயர்,விவரங்களை பதிவு செய்தனர். இதில் அதிகப்படியாக ஆண்கள்தான் திருமணத்திற்கு பெண்கள் தேடி பதிவு செய்திருந்தனர். பெண்கள் தரப்பில் குறைவான அளவே பதிவாகியிருந்தது. அதாவது 11,750 பேர், மணமகள் தேவை என்று பதிவு செய்திருந்தனர்.

அவர்களுக்கு போட்டியாக 250 இளம்பெண்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குள் அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் பெரும்பாலான பெண்கள் படித்து தனியார் நிறுவனங்களில், அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் மணமகன்தான் வேண்டும் என்றும், விவசாயம் செய்யும் மணமகன் வேண்டாம் என்று கூறியுள்ளனர். இது விவசாய பூமியான மண்டியா இளைஞர்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் சமுதாயத்தில் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராக பெண்கள் எண்ணிக்கை இல்லை என்பதையும் தெரியப்படுத்துகிறது.


Next Story