பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து- 13 பேர் உயிரிழப்பு


பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து- 13 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 April 2023 7:07 AM GMT (Updated: 15 April 2023 8:53 AM GMT)

மகராஷ்டிர மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள புனே-மும்பை நெடுஞ்சாலையில் இன்று பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஷிங்ரோபா கோவில் அருகே இன்று அதிகாலை விபத்தில் சிக்கி உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் போலீசாருடன் மலையேற்ற குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.

அந்த பேருந்தில் பயணித்தவர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். விபத்து குறித்து கோபோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story