போலி இணையதளங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பு நாடு முழுவதும் 12 பேர் கைது


போலி இணையதளங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பு நாடு முழுவதும் 12 பேர் கைது
x

மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிப்பதாக ஒரு முன்னணி நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி, மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிப்பதாக ஒரு முன்னணி நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன் பேரில் மேற்கொண்ட விசாரணையில், டெல்லி, பீகாரைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல வேறு சில நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட 3 நடவடிக்கைகளில், உத்தரபிரதேசம், டெல்லி, மும்பையில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.வினியோக உரிமை தருவதாகவும், நிதிச் சேவை வழங்குவதாகவும் கூறி அவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்திருக்கிறது.

இதுதொடர்பாக மேலும் விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story