6 குழந்தைகள் உள்பட 12 பேருக்கு வைரஸ் காய்ச்சல் - சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்
புதுச்சேரியில் ஆறு குழந்தைகள் உள்பட 12 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் ஆறு குழந்தைகள் உள்பட 12 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, பருவநிலை மாற்றத்தால் அனைவருக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story