ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் ரூ 1.03 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்


ஐதராபாத்  சர்வதேச விமான நிலையத்தில் ரூ 1.03 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
x

ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் ரூ 1.03 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

கர்நாடக மாநிலம் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் 2 வழக்குகளில் ரூ 1.03 கோடி மதிப்புள்ள 1.725 கிலோ கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்

ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் அதிகாரிகள் வழக்கமான பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்,அப்போது குவைத்தில் இருந்து துபாய் வழியாக வந்த பயணி ஒருவரை சோதனையிட்டனர் .இதில் அவர் ரூ.72.55 லட்சம் மதிப்புள்ள 1.225 கிலோ கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அதே போல் குவைத்தில் இருந்து தோஹா வழியாக ஹைதராபாத் வந்த பயணி ஒருவரை சோதனையிட்டதில் ரூ.30.51 லட்சம் மதிப்புள்ள 1/2 கிலோ கடத்தல் தங்கம் வைத்திருந்ததும் பறிமுதல் செய்யப்பட்டது . இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story