டெல்லியில் 13,700 கிலோ பட்டாசுகள் பறிமுதல் தடையை மீறியதாக 75 வழக்குகள் பதிவு


டெல்லியில் 13,700 கிலோ பட்டாசுகள் பறிமுதல் தடையை மீறியதாக 75 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 21 Oct 2022 8:03 PM GMT (Updated: 21 Oct 2022 8:12 PM GMT)

தலைநகர் டெல்லியில், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை, ரூ.200 அபராதம், பட்டாசு விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் மற்றும் அபராதம் விதித்து சில நாட்களுக்கு முன்பு உத்தரவு வெளியானது.

இந்த நிலையில் சட்டவிரோதமாக தடையை மீறி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து, பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1 முதல் 19-ந்தேதி வரையில் இந்த நடவடிக்கைகளின் மூலம் 13 ஆயிரத்து 700 கிலோ பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மடாங்கிரி சந்தை பகுதியில் ஒரு விற்பனையாளரின் கடையில் மட்டும் சுமார் 1200 கிலோ பட்டாசு கடந்த திங்கட்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story