கொரோனா ஊரடங்கு: இந்தியாவில் 14% சிறு, குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடல்...!


கொரோனா ஊரடங்கு: இந்தியாவில் 14% சிறு, குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடல்...!
x
தினத்தந்தி 21 Nov 2022 1:49 AM GMT (Updated: 21 Nov 2022 4:17 AM GMT)

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் 14% சிறு, குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

நாடு முழுவது கொரோனா பாதிப்பு வேகமாக பரவியதையடுத்து 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கால் மக்கள் அனைவரும் தங்கள் தொழிலை நடத்த முடியாமல் அவதிபட்டனர். ஆயிரக்கணக்கான சிறு, குறு, நிறுவனங்கள் தொழிலை நடத்த முடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டன. ஊரடங்கால் இந்தியா பொருளாதார இழப்பை எதிர் கொண்டது.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் 14% சிறு, குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்களுக்கான உலகளாவிய கூட்டணி அமைப்பு (கேம்), கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் தொழில்துறை எதிர்கொண்ட பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 14 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பணப்புழக்கம் இல்லாதது காரணமாக இந்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. வங்கிகளில் இந்நிறுவனங்களில் 40% நிறுவனங்களுக்கு கடன் மறுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தொழிலை தொடர்ந்து நடந்த முடி யாத நெருக்கடிக்கு அந்த நிறுவனங்கள் உள்ளாகின என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story