ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 140 கிராம் தங்க நகை அபேஸ்


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 140 கிராம் தங்க நகை அபேஸ்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)

சிவமொக்காவில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 140 கிராம் தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவமொக்கா:-

சிவமொக்கா மாவட்டம் அஸ்வத்நகர் பகுதியை சேர்ந்தவர் அனுஷியா. நேற்று முன்தினம் இவர் தாவணகெரே செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு பஸ்சில் ஏறினர். அப்போது அனுஷியா முண்டியடித்து கொண்டு பஸ்சில் ஏறினார். பின்னர் பஸ் இருக்கையில் அமர்ந்த அவர் கைப்பையை சோதனை செய்தபோது, அதில் இருந்த 140 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கண்டக்டரிடம் கூறினார். அவர் உடனே பஸ்சை தொட்டபேட்டை போலீஸ் நிலையத்திற்கு திரும்பும்படி டிரைவரிடம் கூறினர். அதன்படி பஸ் தொட்டபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றது. இதையடுத்து போலீஸ் நிலையம் சென்ற அனுஷியா, தனது கைப்பையில் இருந்த 140 கிராம் தங்க நகைகள் திருடுபோனதாக புகார் அளித்தார். இந்த நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அனுஷியா அளித்த புகாரின் பேரில் தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story