வட மாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை - 15 பேர் பலி


வட மாநிலங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை - 15 பேர் பலி
x

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

டெல்லி,

வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவ மழை தீவிரமடைந்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரெயில், போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story