15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் தலைமறைவான நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளி பயின்று வருகிறார். இந்த சிறுமி தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்டவராவார். இதன் காரணமாக தினமும் மாலை தனது கிராமத்தில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சிறுமி கடந்த 30ம் தேதி மாலை கிராமத்தில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்றான்.

பின்னர், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அதேகிராமத்தை சேர்ந்த மேலும் 3 இளைஞர்களுடன் சேர்ந்து சிறுமியை அந்த இளைஞன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story