15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்:  வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:45 PM GMT)

15 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மங்களூரு-

15 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் தொல்லை

உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா பாலகுதிரு பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். பாலகுதிரு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அசோக் (வயது 32) என்பவர் தனது காரில் வீட்டிற்கு கொண்டு போய்விடுவதாக கூறினார்.

இதனை நம்பிய சிறுமி அவருடன் காரில் வீட்டிற்கு சென்றாள். ஆனால் அசோக் சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்லாமல், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதைபற்றி யாரிடமும் கூறக்கூடாது என அசோக் சிறுமியை மிரட்டி உள்ளார்.

வாலிபர் கைது

இந்தநிலையில் வீட்டிற்கு சென்ற சிறுமி சோகத்தில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாள். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து பிரம்மாவர் போலீசில் புகாா் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அவரை போலீசார் கோர்ட்டில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அசோக் ஜாமீனில் வெளியே வந்தார்.

20 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு உடுப்பி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. பிரம்மாவர் போலீசார் குற்றப்பத்திரிகையை ேகார்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சீனிவாச சுவர்ணா நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறினார்.

அதில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அசோக்கிற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.23 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.


Next Story