நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 4 Dec 2022 2:23 AM GMT (Updated: 4 Dec 2022 2:31 AM GMT)

குளிர்கால கூட்டத் தொடருக்கான மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் 16 புதிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.

புதுடெல்லி,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், 7-ந் தொடங்குகிறது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் 16 புதிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.

அறிமுகப்படுத்தப்படும் சில மசோதாக்களில், 'வர்த்தக முத்திரைகள் (திருத்தம்) மசோதா', 'பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) (திருத்தம்) மசோதா', 'பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா' மற்றும் 'தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா' ஆகியவை அடங்கும்.

2019 டிசம்பர் 9 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெளிவிவகார நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதாவும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.


Next Story