நடப்பாண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை- வரலாற்றில் இதுதான் அதிகம்..!!
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த முறை சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளனர்.
காஷ்மீர்,
ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆண்டு தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் கூறியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு கணிசமாக கூடிய இந்த எண்ணிக்கை தற்போது 1.62 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
Related Tags :
Next Story