பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் பலி - ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்
பாட்னா:
பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும், பாங்கா, ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேர், முங்கர், கதிஹார், மாதேபுரா மற்றும் சஹஸ்ராவில் தலா ஒருவர் என மொத்தம் 17 பேர் பலியாகினர் என தெரிவித்துள்ளது .
மேலும் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
Related Tags :
Next Story