6 மாதங்களில் 18 சதவீத குடும்பங்களில் மீண்டும் கொரோனா அதிர்ச்சி தகவல்


6 மாதங்களில் 18 சதவீத குடும்பங்களில் மீண்டும் கொரோனா  அதிர்ச்சி தகவல்
x

ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 மாதங்களில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

சுகாதார தன்னார்வ தொண்டு நிறுவனமான 'லோக்கல்சர்க்கிள்ஸ்' கொரோனா தொற்று தொடர்பாக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டோரில் 18 சதவீதத்தினரின் குடும்பங்களில் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு 6 மாதங்களில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றோரில் 45 சதவீதத்தினர், முதல்முறை தொற்று ஏற்பட்ட சில வாரங்களில் மறுதொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 6 மாத இடைவெளியில் மறுதொற்று வந்தது என 27 சதவீதத்தினர் கூறி உள்ளனர். 6 மாதங்களில் 2 முறை அல்லது 3 முறை குடும்பத்தில் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டதா, அந்த தொற்றும், அறிகுறிகளும் எப்படி அமைந்தன எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் முதல் முறை வந்ததை விட இரண்டாவது முறை தொற்று வந்தபோது அதன் பாதிப்பு மோசமாக இருந்ததாக 46 சதவீதத்தினர் தெரிவித்தனர்.


Next Story