ராஜஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மோதி விபத்து
ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து இன்று காலை பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின.
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. விமானப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் மற்றொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்பதும் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரு விமானிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு விமானியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடு பணி நடக்கிறது. இதற்கிடையே ராஜஸ்தானில் ஒரு விமானம் விழுந்துள்ளது. இது தனியாருக்கு சொந்தமான ஜெட் விமானம் என்றும் ஹெலிகாப்டர் என்றும் மாறுபட்ட தகவல் வெளியாகி வருகிறது.
Related Tags :
Next Story