ரெயில் இன்ஜினுக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது


ரெயில் இன்ஜினுக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது
x

Image Courtesy : @Central_Railway

ரெயில் இன்ஜினுக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள கசாரா ரெயில் நிலையத்தில், கடந்த மாதம் 25-ந்தேதி 4-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரெயிலின் இன்ஜின் பெட்டிக்குள் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவாறு ரீல்ஸ் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், சைபர் பிரிவு போலீசாருடன் இணைந்து ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட 2 இளைஞர்களை தேடி வந்தனர். இதனையடுத்து, நாசிக் மாவட்டத்தில் வைத்து ராஜா ஹிம்மத் யர்வால்(20) மற்றும் ரித்தேஷ் ஹிராலால் ஜாதவ்(18) ஆகிய 2 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.


Next Story