மும்பை விமான நிலையத்தில் போர்டிங் பாசை மாற்றிய வெளிநாட்டு பயணிகள் கைது


மும்பை விமான நிலையத்தில் போர்டிங் பாசை மாற்றிய வெளிநாட்டு பயணிகள் கைது
x

மும்பை விமான நிலையத்தில் போர்டிங் பாசை மாற்றி இங்கிலாந்து சென்ற இலங்கையை சேர்ந்தவரையும், ஜெர்மன் நாட்டு பயணியையும் போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் போர்டிங் பாஸ் பெற்று விமானத்தில் ஏறி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார். இதற்கிடையே போர்டிங் பாஸ்சை சரிபார்த்த விமான நிலைய அதிகாரி பாஸ்போர்ட்டில் உள்ள முத்திரை எண்ணும், அவரது போர்டிங் பாஸ்சில் இருந்த முத்திரை எண்ணிலும் வேறுபாடு இருந்ததை கண்டறிந்தனர்.

இதுபற்றி இங்கிலாந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு இறங்கிய இலங்கை பிரஜையை மீண்டும் மும்பைக்கு திருப்பி அனுப்பினர்.

மும்பை வந்த அவரை சாகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த 9-ந் தேதி மும்பை விமான நிலையம் அருகே ஓட்டலில் அவர் தங்கி இருந்தார். அப்போது அதே ஓட்டலில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டு பிரஜையுடன் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. இலங்கை பிரஜை காட்மண்டுவிற்கும், ஜெர்மன் நாட்டு பிரஜை இங்கிலாந்து நாட்டிற்கும் செல்ல இருந்தனர். ஆனால் இருவரும் தங்களின் போர்டிங் பாசை மாற்றி கொண்டு வெவ்வேறு நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.

இதன்படி விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்றவுடன் அங்குள்ள கழிவறையில் 2 பேரும் தங்களின் பாஸ்சை மாற்றி கொண்ட தகவல் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் படி காட்மண்ட் செல்ல இருந்த ஜெர்மன் நாட்டு பிரஜையையும் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 2 பேர் மீதும் மோசடி, கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

1 More update

Next Story