பஞ்சாப் பாட்டியாலா பல்கலை கழகத்தில் 2 குழுக்கள் மோதல்; மாணவர் குத்தி கொலை


பஞ்சாப் பாட்டியாலா பல்கலை கழகத்தில் 2 குழுக்கள் மோதல்; மாணவர் குத்தி கொலை
x

பஞ்சாப் பாட்டியாலா பல்கலை கழகத்தில் 2 குழுக்கள் இடையே நடந்த மோதலில் மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார்.



சண்டிகார்,


பஞ்சாப் பாட்டியாலா பல்கலை கழகத்தின் வளாகத்தில் இன்று 2 குழுக்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

இதில், கணினி அறிவியல் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உள்ளார். கடுமையான காயம் அடைந்த அவருக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின்னர், பாட்டியாலாவில் உள்ள ரஜீந்திரா மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று உள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

அவர் நபா பகுதியை சேர்ந்த நவ்ஜோத் சிங் (வயது 20) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. 6-வது செமஸ்டர் படித்து வந்து உள்ளார். இந்த தாக்குதலில் மற்றொரு மாணவர் காயமடைந்து உள்ளார்.

அவரை இன்னும் அடையாளம் காணவில்லை. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Next Story