மரத்தில் கார் மோதி 2 பேர் சாவு
மரத்தில் கார் மோதி 2 பேர் இறந்தனர்.
சிக்கமகளூரு,
ஹாவேரி மாவட்டம் கடோன் பகுதியை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரில் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். கார் கடூர்-சிக்கமகளூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேஷ் மற்றும் பிரேமா ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.