ஆந்திராவில் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அனகாபள்ளி,
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அனல் மின்நிலையத்தில் கன்வெனர் பெல்ட் பாதை (convener belt track) உடைந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
முன்னதாக சிம்ஹாத்ரி சூப்பர் தெர்மல் பவர் பிளாண்ட் - நேஷனல் அனல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி) யூனிட்-1-ல் உள்ள கன்வெனர் பெல்ட் பாதையை தொழிலாளர்கள் சரிசெய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பெல்ட் உடைந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் சிலர் காயமடைந்தனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story