வீடு புகுந்து ரூ.2¼ லட்சம் நகைகள் திருட்டு
சிவமொக்கா டவுன் அருகே வீடு புகுந்து ரூ.2¼ லட்சம் நகைகளை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிவமொக்கா;
சிவமொக்கா டவுன் பொம்மனகட்டே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின் மீட்டர் போர்டு உள்ளே மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்று இருந்தார்.
இதையறிந்த மர்மநபர் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருட்டி விட்டு தப்பி சென்றாா். இதையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த கார்த்திக் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்துள்ளது.
மேலும் அதில் இருந்து தங்கச்சங்கிலி, மோதிரம் என 62 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது. அதன் மொத்த மதிப்பு ரூ.2¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அப்போது தான் அவருக்கு மர்மநபர் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வினோபாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.