சில்வாசா உயிரியல் பூங்காவிற்கு புதிதாக 2 சிங்கங்கள் வருகை


சில்வாசா உயிரியல் பூங்காவிற்கு புதிதாக 2 சிங்கங்கள் வருகை
x

கோப்புப்படம் 

ராஜ்கோட் உயிரியல் பூங்காவில் இருந்து பெண் சிங்கமும், சக்கர்பார்க் உயிரியல் பூங்காவில் இருந்து ஆண் சிங்கமும் வரவழைக்கப்பட்டது.

சில்வாசா,

தாத்ராநகர் ஹைவேலி சில்வாசா பகுதியில் சிங்கம் வளர்ப்புக்கான வனச்சரகத்திற்கு சொந்தமான லயன் சபாரி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்கா 20 ஹெக்டேர் பரப்பளவை கொண்டது. இங்கு வனவிலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வாகனத்தில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ராஜ்கோட் உயிரியல் பூங்காவில் இருந்து பெண் சிங்கமும், சக்கர்பார்க் உயிரியல் பூங்காவில் இருந்து ஆண் சிங்கமும் வரவழைக்கப்பட்டது.

தற்போது காடுகளில் புதிதாக வந்த சிங்கங்கள் சுதந்திரமாக உலாவ விடப்பட்டதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சில நாட்கள் கழித்து பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக வனக்காப்பக அதிகாரி தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story