உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா ஒசபேட்டை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் வசதிக்காக அந்த பகுதியில் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தை சேர்ந்த பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் நடத்திய விசாரணையில் கிராம மண்டல உதவி என்ஜினீயராக இருக்கும் சன்னவீரய்யா மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி சுனந்தாவின் அலட்சியத்தால் குடிநீருடன் கழிவுநீர் கலந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மாவட்ட பஞ்சாயத்து செயல் அதிகாரி உத்தரவிட்டார்.