ராஜஸ்தான்: ரெயில்வே நிலையத்திலிருந்து உயர் மின்னழுத்த கம்பிகளை திருடிய 2 பேர் கைது..!


ராஜஸ்தான்: ரெயில்வே நிலையத்திலிருந்து உயர் மின்னழுத்த கம்பிகளை திருடிய 2 பேர் கைது..!
x

ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜோத்பூர்,

ஜோத்பூர்-பாலி வழித்தடத்தில் போமதாரா, ராஜ்கியாவாஸ் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 100 மீட்டர் நீளமுள்ள காப்பர் கம்பியை போலீசார் மீட்டனர்.

கம்பியை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில கருவிகளை அந்த இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் 400-க்கும் மேற்பட்ட கடைகளுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து, அதன் மூலம் பாலியில் உள்ள ஹார்டுவேர் கடை ஒன்றிலிருந்து கருவிகள் வாங்கப்பட்டதை கண்டறிந்தனர்.

தொடர்ந்து ஷங்கர் லால் (வயது 25) மற்றும் ஹன்ஸ் ராஜ் (வயது 28) ஆகிய இருவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மொத்தம் 4 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருடப்பட்ட கம்பியின் ஒரு பகுதியை இருவரிடம் விற்றுள்ளனர். அதில் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story