எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x

எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் மசில் செக்டார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக நேற்று அதிகாலையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

சரியான நேரத்தில் அதை கவனித்து விட்ட ராணுவ வீரர்களும், போலீசாரும் அந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் திருப்பி சுட்டதால், கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 2 பயங்கரவாதிகளும் பலியானார்கள். இதன் மூலம், ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.


Next Story