மூதாட்டி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது


மூதாட்டி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது
x

பெங்களூருவில் மூதாட்டி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி டவுன் ஐஸ்வர்யா லே-அவுட்டில் வசித்து வந்தவர் அஞ்சலா (வயது 60). இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அஞ்சலாவை மர்மநபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்தனர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.13 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அஞ்சலாவை கொலை செய்ததாக பீகார் மாநிலம் பகல்பூரை சேர்ந்த தீரஜ்குமார் (34), பசுபதி (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சவன்குமார் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். அஞ்சலாவின் கணவர் அஜித் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வந்த 3 பேரும், சமீபத்தில் வேலையில் இருந்து நின்றனர். அஜித்திடம் பணம் இருப்பதை அறிந்து 3 பேரும், அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி சம்பவத்தன்று அஜித்தின் வீட்டிற்குள் புகுந்த 3 பேரும் அஞ்சலாவை கொலை செய்துவிட்டு ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


Next Story