திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது


திருட்டு வழக்கில் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:47 PM GMT)

மைசூருவில் திருட்டு வழக்கில் 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் ரூ.11¾ லட்சம் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மைசூரு:-

மைசூரு டவுன் குவெம்பு நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் 2 பேர் சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சந்தோஷ் (23), தர்ஷன் (20) என்பதும், அவர்கள் மைசூரு நகரில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், தனியாக வரும் பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது ெசய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.11.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இதுகுறித்து குவெம்பு நகர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story