பெங்களூருவில் 20 மின்சார மினி பஸ்கள் இயக்கப்படும்; பி.எம்.டி.சி. தகவல்


பெங்களூருவில் 20 மின்சார மினி பஸ்கள் இயக்கப்படும்; பி.எம்.டி.சி. தகவல்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 20 மின்சார மினி பஸ்கள் இயக்கப்படும் என்று பி.எம்.டி.சி. தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் பி.எம்.டி.சி. சார்பில் 6 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெங்களூருவின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ் சேவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பி.எம்.டி.சி. சார்பில் 20 மின்சார மினி பஸ்கள் வாங்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை பி.எம்.டி.சி. நிர்வாகம் கோரி உள்ளது. இதுகுறித்து பி.எம்.டி.சி. நிர்வாகம் சார்பில் கூறுகையில், பெங்களூருவில் உள்ள நெருக்கடியான சாலைகளில் பயணம் செய்வதற்கு வசதியாக மின்சார மினி பஸ்கள் வாங்கப்படுகிறது. இந்த பஸ்களை ஒரு முறை சார்ஜ் செய்தால், 150 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த பஸ்களை சோதனை முறையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடியான சாலைகள், மெட்ரோ வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் சுலபமாக மெட்ரோ, பஸ் நிலையங்களில் இருந்து வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தங்களுக்கு சென்றடைய முடியும். விரைவில் கூடுதல் பஸ்கள் வாங்கப்படும். இந்த பஸ் சேவையால் தனிநபர் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்து விடும். இந்த பஸ்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது என்பதால் பசுவை வாகனங்களாக இது கருதப்படுகிறது என கூறப்படுகிறது.


Related Tags :
Next Story