மைனர் பெண் பலாத்காரம் வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


மைனர் பெண் பலாத்காரம் வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x

மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கலபுரகி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கலபுரகி:-

கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா ரேவுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோருடன் மைனர் பெண் ஒருவள் வசித்து வந்தாள். அந்த பெண்ணின் வீட்டின் அருகே, சபானசாபா நதாப் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தொழிலாளியான சபானசாபா நதாப், மைனர் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து மைனர் பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொள்வோம் என கூறி உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சபானசாபா நதாப், மைனர் பெண்ணை மிரட்டி, கடத்தி சென்று பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரேவுரா போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு போக்சோ வழக்கை விசாரிக்கும் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தது உறுதியானதால், சபானசாபா நதாபுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story