வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - பயங்கரவாதிக்கு தூக்கு


வாரணாசி குண்டுவெடிப்பு வழக்கு - பயங்கரவாதிக்கு தூக்கு
x

2006-ல் வாரணாசியில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கராவதிக்கு தூக்கு தண்டனை விதித்து காசியாபாத் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

காசியாபாத்,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து காசியாபாத் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாரணாசியில் இந்து பல்கலைக்கழகம், அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்பு காரணம் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story