எதிர்க்கட்சிகள் கிரண் ரிஜ்ஜூ விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பினால், அவர்களுக்குதான் சங்கடம் - மத்திய அரசு


எதிர்க்கட்சிகள் கிரண் ரிஜ்ஜூ விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பினால், அவர்களுக்குதான் சங்கடம் - மத்திய அரசு
x
தினத்தந்தி 14 Dec 2016 5:24 AM GMT (Updated: 2016-12-14T10:54:05+05:30)

வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜ்ஜூவிற்கு அருணாசலப் பிரதேசத்தில் ரூ.450 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள மின்சாரத் திட்ட ஊழலில் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, இது தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூற தொடங்கிவிட்டது. கிரண் ரிஜ்ஜூவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. எனினும், தனக்கு எதிராக கற்பனையான கட்டுக்கதைகளைப் புனைவோர் ஷூக்களால் அடிபடுவார்கள் என்று ரிஜிஜு தெரிவித்தார்.புதுடெல்லி, 

எதிர்க்கட்சிகள் கிரண் ரிஜ்ஜூ விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பினால் அவர்களுக்குதான் சங்கடம் என மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறிஉள்ளார். 

வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜ்ஜூவிற்கு அருணாசலப் பிரதேசத்தில் ரூ.450 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ள மின்சாரத் திட்ட ஊழலில் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது, இது தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூற தொடங்கிவிட்டது. கிரண் ரிஜ்ஜூவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. எனினும், தனக்கு எதிராக கற்பனையான கட்டுக்கதைகளைப் புனைவோர் ஷூக்களால் அடிபடுவார்கள் என்று ரிஜிஜு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நீர் மின் திட்டத்துக்கு மத்தியிலும், அருணாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி புரிந்தபோதுதான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்கட்சி தனது பாவங்களுக்காக தற்போது கிரண் ரிஜ்ஜூவின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என்றது பா.ஜனதா. 

ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக நிற்கின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது. எதிர்க்கட்சிகள் அவை கூடும் நாட்கள் காலையில் ஒன்றாக கூடி அன்றைய வியூகம் குறித்து முடிவு எடுக்கிறார். எதிர்க்கட்சிகள் அமளியால் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது. இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கிரண் ரிஜ்ஜூ விவகாரத்தை எழுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் இரு அவைகளிலும் கிரண் ரிஜ்ஜூ விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டு உள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பாக விசாரிக்க காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், “எதிர்க்கட்சிகள் கிரண் ரிஜ்ஜூ விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பினால் அவர்களுக்குதான் சங்கடம், அவர்கள் அதிகமான உண்மைகளை எதிர்நோக்க வேண்டியது இருக்கும்,” என்றார். 

Next Story