காங்கிரஸ் இல்லாத இந்தியாவிற்கான கடைசி அத்தியாயத்தை ராகுல் எழுதுகிறார்: பா.ஜனதா விமர்சனம்


காங்கிரஸ் இல்லாத இந்தியாவிற்கான கடைசி அத்தியாயத்தை ராகுல் எழுதுகிறார்: பா.ஜனதா விமர்சனம்
x
தினத்தந்தி 16 Dec 2016 5:22 AM GMT (Updated: 16 Dec 2016 5:22 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாராளுமன்றத்தில் நான் வாயை திறக்க அனுமதிக்கப்படுவதில் பிரதமர் தனிப்பட்ட முறையில் பயப்படுகிறார். ஏனென்றால் அவரைப்பற்றிய தனிப்பட்ட தகவல் என்னிடம் இருக்கிறது. அது அவரது பலூனை வெடிக்க செய்யும். எனவேதான் பாராளுமன்றத்தில் பேச எனக்கு அனுமதி இல்லை’’ என குறிப்பிட்டார். அப்போது, ‘‘அது என்ன மாதிரியான தகவல்?’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி, ‘‘அந்த தகவல், நரேந்திர மோடி பற்றிய தனிப்பட்ட தகவல். அதை நான் பாராளுமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அது பிரதமரின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல் ஆகும். அது குறித்த விரிவான தகவல்கள் எங்களிடம் உள்ளன. அதை நாங்கள் பாராளுமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறோம்.


புதுடெல்லி, 

காங்கிரஸ் இல்லாத இந்தியாவிற்கான கடைசி அத்தியாயத்தை ராகுல் காந்தி எழுதுகிறார் என்று பாரதீய ஜனதா விமர்சனம் செய்து உள்ளது.

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால், பாராளுமன்றம் முடங்கி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாராளுமன்றத்தில் நான் வாயை திறக்க அனுமதிக்கப்படுவதில் பிரதமர் தனிப்பட்ட முறையில் பயப்படுகிறார். ஏனென்றால் அவரைப்பற்றிய தனிப்பட்ட தகவல் என்னிடம் இருக்கிறது. அது அவரது பலூனை வெடிக்க செய்யும். எனவேதான் பாராளுமன்றத்தில் பேச எனக்கு அனுமதி இல்லை’’ என குறிப்பிட்டார்.
அப்போது, ‘‘அது என்ன மாதிரியான தகவல்?’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி, ‘‘அந்த தகவல், நரேந்திர மோடி பற்றிய தனிப்பட்ட தகவல். அதை நான் பாராளுமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அது பிரதமரின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல் ஆகும். அது குறித்த விரிவான தகவல்கள் எங்களிடம் உள்ளன. அதை நாங்கள் பாராளுமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். 

எனவே தான் எங்களுக்கு பேச அனுமதி இல்லை’’ என கூறினார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசின் மீது ராகுல் காந்தி சுமத்தினார்.  

ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து பாரதீய ஜனதாவின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி வெளியிட்டு உள்ள அறிக்கையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது தோல்வியடைந்த, காலாவதியான கதைக்கருவின் மூலம் காங்கிரஸ் இல்லாத இந்தியாவுக்கான கடைசி அத்தியாயத்தை எழுதி வருகிறார். அக்கட்சிக்கு இதுவரை இருந்து வந்த ஆதரவு தளத்தையும் அவர் சிதைத்து வருகிறார். காங்கிரஸிடமோ, ராகுல் காந்தியிடமோ உண்மையோ, தர்க்கரீதியான காரண காரியங்களோ இல்லை.

பொய்யை பரப்புவதன் மூலமும் கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுவிழக்க செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர். சில மாநில சட்டப் பேரவைகளிலும் சில மாநில உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாரதீய வெற்றி பெற்றது. காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் இல்லாத நிலை என்பதை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. மிகப் பழமையான கட்சியான காங்கிரஸின் இந்த நிலைக்கு அக்கட்சியின் இளம் தலைமுறை தலைவரும் (ராகுல்) ஒரு காரணம். 

காங்கிரசுக்கு எதிராக ஊழல் புகார்கள் அடுத்தடுத்த வெளியாகி வருகின்றன. அவை இளவரசரின் (ராகுல் காந்தி) அரசியல் கணக்குகளை பாதிக்க செய்துவிடும். காங்கிரசின் மரபணுவிலேயே ஊழலும், முறைகேடும் உள்ளன. ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்துக்கு (சோனியா குடும்பம்) தொடர்பு இருப்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதனால்தான் அக்கட்சியினரும், இளவரசரும் எங்கெங்கும் ஊழல் இருப்பதாக கருதுகின்றனர். இதற்கு முன்பும் ராகுல் காந்தி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். ஆனால் உண்மை வெளிவந்தபோது அக்கட்சி தர்மசங்கடத்தை சந்தித்தது.

லலித் மோடி விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தி கடந்த ஆண்டில் பாரதீய ஜனதா அரசை சாடினார். இந்த விவகாரத்தில் தாம் பேசினால் பூகம்பம் வெடிக்கும் என்று அப்போதும் அவர் தெரிவித்தார். அதேபோல், அவர் இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியதை தொடர்ந்து பூகம்பம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக, மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது, என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார். இதை இத்தாலி கோர்ட்டும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்த பிரச்சினையில் தேவை இல்லாமல் சோனியா காந்தியின் பெயரை பாரதீய ஜனதா கட்சியினர் இழுத்தால் அவர்கள் பரிகாசத்துக்கு உள்ளாக நேரிடும் என்றார் ஏ.கே. அந்தோணி.


Next Story