நாடு முழுவதும் ரூ.2,900 கோடி சிக்கியது தமிழ்நாட்டில் ரூ.140 கோடி பறிமுதல்


நாடு முழுவதும் ரூ.2,900 கோடி சிக்கியது தமிழ்நாட்டில் ரூ.140 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 15 Dec 2016 8:15 PM GMT (Updated: 16 Dec 2016 7:42 AM GMT)

புதுடெல்லி, கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2 ஆயிரம், 500 ரூபாய் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.

புதுடெல்லி,

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து 2 ஆயிரம், 500 ரூபாய் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டன.

ஆனால், கருப்பு பணம் பதுக்கி வைத்து இருந்தவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி இருந்தது தெரிய வந்தது.

இவ்வாறு பல கோடி ரூபாய் அவர்களுக்கு கைமாறி இருந்தது. வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் இந்த மோசடி நடந்திருந்தது.

இதுபற்றி அறிந்த வருமான வரி அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த சோதனை நடந்து வந்தது. இதுவரை நாடு முழுவதும் 586 இடங்களில் சோதனை நடத்தி உள்ளனர். அதில், ரூ.2,900 கோடி கருப்பு பணம் சிக்கி உள்ளது.  ரூ.300 கோடி அளவுக்கு ரொக்க பணத்தை கைப்பற்றி உள்ளனர். அதில், ரூ.79 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகள் இது தவிர 2,600 கோடி அளவுக்கு கணக்கில் காட்டாத வருமானம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் வருமான வரி அதிகாரிகள் ரொக்க பணத்தை  கைப்பற்றி உள்ளனர்.  அவர்கள் கைப்பற்றி உள்ள ரூ.300 கோடி ரொக்கப்பணத்தில் ரூ.140 கோடி தமிழ்நாட்டில் கைப்பற்றப்பட்டதாகும்.  அதில், ரூ.100 கோடி ஒரே நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.140 கோடி பணத்தில் 52 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும். 

Next Story