கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்

x
தினத்தந்தி 17 Dec 2016 2:58 AM GMT (Updated: 2016-12-17T08:28:37+05:30)

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதியை நேரில் பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னை வருவதாக தகவல் வெளியானது.

சென்னை,

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் ‘தினத்தந்தி’ நிருபர் நேற்று இரவு கேட்டபோது, ‘‘காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கோவாவில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்று இருக்கிறார். அவர் கோவாவில் இருந்து புறப்பட்டு இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் அவர் காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க செல்கிறார்’’ என்று கூறினார்.

Next Story