ரூ.130 கோடி சுருட்டியதாக கைது: நடிகை தன்யா மீது மேலும் மோசடி புகார்கள் குவிகின்றன போலீஸ் தீவிர விசாரணை


ரூ.130 கோடி சுருட்டியதாக கைது: நடிகை தன்யா மீது மேலும் மோசடி புகார்கள் குவிகின்றன போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 17 Dec 2016 8:30 PM GMT (Updated: 2016-12-18T01:41:57+05:30)

கைதான நடிகை தன்யா மீது மேலும் மோசடி புகார்கள் குவிகின்றன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.130 கோடி மோசடி பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ் ரூ.130 கோடி மோசடி புகாரில் கைதானது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்யா கணவ

திருவனந்தபுரம்

கைதான நடிகை தன்யா மீது மேலும் மோசடி புகார்கள் குவிகின்றன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.130 கோடி மோசடி

பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ் ரூ.130 கோடி மோசடி புகாரில் கைதானது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்யா கணவர் ஜான் ஜேக்கப்பும் அவரது தந்தை ஜேக்கப் சாம்சனும் திருவனந்தபுரத்தில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி அதன்மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தில் நடிகை தன்யாவும் இயக்குனராக உள்ளார். திருவனந்தபுரத்தில் 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டித்தருவதாக தன்யாவும் அவரது கணவரும் விளம்பரம் செய்து பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து உள்ளனர். 2014–ம் ஆண்டுக்குள் இந்த வீடுகளை கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தனர்.

மேலும் புகார்கள்

ஆனால் திட்டமிட்டபடி வீடுகள் கட்டிக்கொடுக்காததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தன்யா மற்றும் அவரது கணவர் ஜான்ஜேக்கப், மாமனார் ஜேக்கப் சாம்சன் ஆகியோரை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் மேலும் பலர் தன்யாவும் அவரது கணவரும் தங்களிடம் பணமோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது புகார்கள் குவிகிறது. இதனால் மோசடி ரூ.130 கோடிகளை தாண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தன்யா உள்ளிட்ட கைதான 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தன்யாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

விளம்பர படங்கள்

தன்யா ஆரம்பத்தில் நகைகடை, ஜவுளி கடைகள், எண்ணெய், பெயின்ட் நிறுவனங்களின் விளம்பர படங்களில் மாடலிங் ஆக வந்தார். பிறகு சினிமாவுக்கு தாவினார். 2006–ம் ஆண்டு திருடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். வீரமும் ஈரமும் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். அதன்பிறகு மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். கேரளா கபே, தலப்பாவு, நாயகன், ரெட் சில்லீஸ் பிரணாயம் உள்பட 20–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

கடைசியாக அவர் நடித்த என்னன்னும் ஓர்மக்கே என்ற மலையாள படம் 2012–ம் ஆண்டு வந்தது. அதன்பிறகு தன்யாவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொழில் அதிபர் ஜான்ஜேக்கப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு தற்போது மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.


Next Story