அடுத்த ஆண்டு ரெயில் கட்டணம் உயரும் நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசக தகவல்

அடுத்த ஆண்டு ரெயில் கட்டணம் உயரும் நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசக தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2016 1:46 PM GMT (Updated: 2016-12-20T19:16:09+05:30)

டெல்லியில் இந்திய தொழிற் கூட்டமைப்பும் ரெயில்வேயும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நிதி மந்திரி அருண்ஜெட்லி கலந்து கொண்டார். அப்போது அவர் ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்பதை சூசகமாக குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் இந்திய தொழிற் கூட்டமைப்பும் ரெயில்வேயும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நிதி மந்திரி அருண்ஜெட்லி கலந்து கொண்டார். அப்போது அவர் ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்பதை சூசகமாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

இன்று உலகின் பல்வேறு ரயில்வேக்களில் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அவை பல மடங்கு லாபத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஆனால்  நமது நாட்டில் தலை கீழாக இருக்கிறது. இதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் வரும் காலங்களில் ரயில்வே உபயோகிப்பாளர்கள் உரிய கட்டணம் செலுத்த வேண்டி வரும் என அவர் குறிப்பிட்டார்.  எந்த ஒரு நிறுவனமும், குறிப்பாக வர்த்தக நிறுவனம் சிறப்பாக செயல்படவேண்டும் என்றால் அதற்கு வாடிக்கையாளர்கள் தகுந்த சேவைக் கட்டணங்களை செலுத்தியே ஆகவேண்டும்.  கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு அளிக்கும் சேவைகள் விஷயத்தில் ரெயில்வே இலாகா மிகுந்த கவனம் செலுத்தி வருவது பாராட்டத்தக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story