2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது
x
தினத்தந்தி 20 Dec 2016 3:48 PM GMT (Updated: 20 Dec 2016 3:48 PM GMT)

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என  சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுதேர்வு நடைப்பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்கு இந்த பொது தேர்வு நடைமுறை 2010-ஆம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் கருத்தை முன் வைத்தனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என்றும், பொதுத்தேர்வை கட்டாயமாக்கும் பரிந்துரையை சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு ஏற்றதாத தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Next Story